சிப்லா காலாண்டு முடிவுகள் வெளியீடு - நிகர லாபம் 45% உயர்வு

July 27, 2023

மருந்து துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள சிப்லா, தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 45.1% உயர்ந்து, 995.7 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 17.7% உயர்ந்து 6328.9 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில், சிப்லா நிறுவனம் அதீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் வரலாற்று உச்ச வருவாயை சிப்லா பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 43% […]

மருந்து துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள சிப்லா, தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 45.1% உயர்ந்து, 995.7 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 17.7% உயர்ந்து 6328.9 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில், சிப்லா நிறுவனம் அதீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் வரலாற்று உச்ச வருவாயை சிப்லா பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 43% வருவாய் உயர்வுடன், சிப்லாவின் அமெரிக்க வர்த்தகம் 222 மில்லியன் டாலர்கள் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், தென் ஆப்பிரிக்காவில் 13%, இந்தியாவில் 12% வளர்ச்சியை சிப்லா நிறுவனம் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியான பின்னர், இந்திய பங்குச் சந்தையில், சிப்லா நிறுவன பங்குகள் 9.6% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu