நெட்வொர்க்கிங் துறையில் இயங்கி வரும் முன்னணி நிறுவனமான சிஸ்கோ, பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனம் வரலாற்று உச்ச வருவாயை பதிவு செய்தது. அதை தொடர்ந்து பணி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது.
தொழில்நுட்ப துறை சார்ந்து இயங்கும் பல நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. சிஸ்கோ நிறுவனமும் அந்தப் பட்டியலில் புதிதாக இடம்பிடித்துள்ளது. நிறுவனத்தின் 5% ஊழியர்கள், அதாவது 4000 மேற்பட்ட பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் சுக் ராபின்ஸ் அறிவித்துள்ளார். மேலும், நிறுவனத்தின் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால், பணி நீக்கம் குறித்த விரிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.