அமெரிக்காவைச் சேர்ந்த சிஸ்கோ நிறுவனம் கிட்டத்தட்ட 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 5% ஆகும்.
நெட்வொர்க்கிங் துறையில் அமெரிக்காவை சேர்ந்த சிஸ்கோ நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி, எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பணிநீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெரும்பாலான பிரிவுகளில் மறு சீர்அமைப்பு நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிஸ்கோ நிறுவனத்தின் அறிவிப்போடு சேர்த்து, 2024 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 34000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிகழாண்டில் மட்டும் மொத்தம் 141 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்கத்தை அறிவித்துள்ளன.