சிட்டி வங்கி குழுமத்தில் நூற்றுக்கணக்கானோர் பணி நீக்கம்

March 4, 2023

சிட்டி வங்கி குழுமத்தில் நூற்றுக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மொத்த சிட்டி குழும ஊழியர்கள் எண்ணிக்கையில் 1% க்கும் கீழான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, முதலீட்டு வங்கி பிரிவில் இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களும், அமெரிக்க கடன் தொடர்பான செயல்பாடுகளில் பணியாற்றி வருபவர்களும் பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை […]

சிட்டி வங்கி குழுமத்தில் நூற்றுக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மொத்த சிட்டி குழும ஊழியர்கள் எண்ணிக்கையில் 1% க்கும் கீழான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, முதலீட்டு வங்கி பிரிவில் இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களும், அமெரிக்க கடன் தொடர்பான செயல்பாடுகளில் பணியாற்றி வருபவர்களும் பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை சிட்டி குழுமத்தின் வழக்கமான வர்த்தகத் திட்டமிடல் என்று சொல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க சிட்டி குழுமம் மறுத்துவிட்டது. ஆனால், இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஜே பி மோ, கோல்ட்மேன் சாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் பணி நீக்கத்தை அறிவித்த பின்னர், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளதால், கவனம் பெற்றுள்ளது. பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளையில், சிட்டி குழுமம் பணி அமர்வுகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu