அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும்போது, கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, டிரம்ப் தானியங்கி குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், இதற்கான நிர்வாக உத்தரவை வெளியிடுவார் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம், அமெரிக்காவில் குடியுரிமை பற்றிய நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.