கிரீன்லாந்தின் பனிக்கட்டியில் புதைந்திருந்த 52,000 சதுர மைல் பரப்பளவு கொண்ட ரகசிய ராணுவ தளமான கேம்ப் செஞ்சுரியை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1960களில் அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவரின் கட்டளையின் பேரில் கட்டப்பட்ட இந்த தளம், 600 அணுசக்தி ஏவுகணைகளை வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. டென்மார்க்கிடம் இருந்து மறைக்கப்பட்ட இந்த தகவல், 1997-ம் ஆண்டில் தான் வெளியானது.
கடந்த 1967-ம் ஆண்டில் கைவிடப்பட்ட இந்த தளம், கடந்த ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்ப்ஸ்ட்ரீம் III விமானத்தின் ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர். நாசா விஞ்ஞானி அலெக்ஸ் கார்ட்னர், இந்த கண்டுபிடிப்பு எதிர்பாராதது என்று தெரிவித்துள்ளார்.














