ஜிஎஸ்டி கட்டணங்களை செலுத்த, சிட்டி யூனியன் வங்கிக்கு ஜிஎஸ்டி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே, சிட்டி யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள், நேரடியாக வங்கி மூலம், அரசாங்கத்திற்கு ஜிஎஸ்டி கட்டணங்களை செலுத்த முடியும்.
ஜிஎஸ்டி கவுன்சில், பல்வேறு தனியார் வங்கிகளுக்கு ஜிஎஸ்டி கட்டணங்களை செலுத்தும் அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. அந்த வரிசையில் சிட்டி யூனியன் வங்கி இணைந்துள்ளது. வங்கியின் தளத்தில் 'ஜிஎஸ்டி போர்டல்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், நேரடியாக, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தலாம்.
இதுகுறித்து பேசிய சிட்டி யூனியன் வங்கியின் தலைமை செயல் அதிகாரி காமகோடி, "எங்கள் வங்கியில், பாதுகாப்பான பரிவர்த்தனையை உறுதி செய்ய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.