ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் இந்திய வன சேவை தேர்வு மே 25-ம் தேதி ஆம் தேதி நடைபெற உள்ளது.
யு.பி.எஸ்.சி. 2025 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேதி அறிவித்துள்ளது. முதல்நிலைத்தேர்வு வரும் மே 25-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 979 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற பணிகளுக்கு நடத்தப்படுகிறது. கடந்த தேர்வில் 1056 பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், இந்த முறை 77 பணியிடங்கள் குறைந்துள்ளது. அதே நாளில் இந்திய வன சேவைக்கான தேர்வு நடைபெறுகிறது, இதில் 150 பணியிடங்கள் காத்திருக்கின்றன.