சூடானில் உள்நாட்டு கலவரம் தொடர்ந்து பரவுகிறது. துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 127 பேர் உயிரிழந்தனர்.
2021-ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து, ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் ஆட்சியை நடத்தி வருகிறார். ராணுவம், துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினரை இணைக்க முயற்சிக்கையில், அதுவே எதிர்ப்பை கிளப்பியது. இதனால் இரு படைகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. 2022-ம் ஆண்டு முதல் இது உள்நாட்டு போராக மாறி கடுமையான சண்டைகளுக்கு வழிவகுத்தது. இந்த போரின் விளைவாக, பல ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ராணுவத்தினரின் இந்த தாக்குதலில் அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.














