ஜம்முவில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே மோதல்

December 28, 2022

ஜம்முவில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் சித்ரா நகரில் தவி பாலத்தில் இன்று காலை 7.30 மணியளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது, லாரிக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த […]

ஜம்முவில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் சித்ரா நகரில் தவி பாலத்தில் இன்று காலை 7.30 மணியளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அப்போது, லாரிக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu