தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்விற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதியும், மே 14-ஆம் தேதியும் வெளியாகியது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது துணை தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளும், ஜூலை இரண்டாம் தேதி முதல் 9ம் தேதி வரை 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளும் நடைபெற உள்ளது