பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்

February 29, 2024

தமிழகத்தில் நாளை முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்குகின்றன. இதில் சுமார் 9.25 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இதற்காக 3302 மையங்களில் தேர்வுகள் நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசியாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் இருப்பதற்கு 3200 […]

தமிழகத்தில் நாளை முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்குகின்றன. இதில் சுமார் 9.25 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இதற்காக 3302 மையங்களில் தேர்வுகள் நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசியாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் இருப்பதற்கு 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை தொடங்கும் தேர்வானது 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மன அழுத்தம் இன்றி இருப்பதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மாணவ மாணவிகள் பதட்டத்தை தணிக்க எந்த நேரத்திலும் உதவி கேட்பதற்காக 14417 என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu