கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த கூவம் ஆற்றில் தூய்மை பணி நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நீர்நிலைப் பகுதிகளில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறுகையில், நீர்நிலைகளில் வளரும் ஆகாயத்தாமரைகளால் கொசு உற்பத்தி அதிகமாகி அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் நீர்நிலைகளில் வலைகள் அமைக்கப்பட்டு ஆகாயத் தாமரைகள் தடுக்கப்படுகிறது. ஆம்பியன் எந்திரங்கள் மூலம் அவை வேரோடு அகற்றப்பட்டு கொசு உற்பத்தியாகாத வகையில் மருந்து தெளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.