1337 ஆண்டுகளில், இன்று பூமிக்கு மிக அருகில் வரும் நிலவு

January 21, 2023

இன்றைய அமாவாசை தினத்தில், நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது. இது 1337 ஆண்டுகளில் மிகவும் நெருக்கமாக வரும் நிகழ்வு என்று விஞ்ஞானிகளால் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இன்று அமாவாசை தினம் என்பதால் நிலவின் அழகை பூமியிலிருந்து ரசிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இது குறித்து 'எர்த் ஸ்கை' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதற்கு முன்னர் நிலவு பூமிக்கு நெருக்கமாக 992 ஆண்டுகளுக்கு முன் வந்தது. மேலும், இன்றைக்கு பின்னர் 345 ஆண்டுகள் கழித்து நிலவு பூமிக்கு நெருக்கமாக வர […]

இன்றைய அமாவாசை தினத்தில், நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது. இது 1337 ஆண்டுகளில் மிகவும் நெருக்கமாக வரும் நிகழ்வு என்று விஞ்ஞானிகளால் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இன்று அமாவாசை தினம் என்பதால் நிலவின் அழகை பூமியிலிருந்து ரசிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து 'எர்த் ஸ்கை' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதற்கு முன்னர் நிலவு பூமிக்கு நெருக்கமாக 992 ஆண்டுகளுக்கு முன் வந்தது. மேலும், இன்றைக்கு பின்னர் 345 ஆண்டுகள் கழித்து நிலவு பூமிக்கு நெருக்கமாக வர உள்ளது. எனவே, 1337 ஆண்டுகளில், இன்றைய தினத்தில் நிலவு பூமிக்கு நெருக்கமாக வருகிறது.

நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வரும் நிலவு, பூமிக்கு மிக நெருக்கமாக வரும் பொழுது, 238855 மைல்கள் தொலைவிலும், பூமிக்கு தொலைவாக செல்லும் பொழுது 252088 மைல்கள் தொலைவிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஒவ்வொரு வருடமும் பூமியிலிருந்து ஒரு இன்ச் அளவிற்கு தொலைவாக, நிலவு நகர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu