தமிழகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து நான்கு மாவட்டங்களில் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வருகின்ற 21,22 ஆம் தேதிகளில் மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். இதுவரை தென் மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் ஆகிய பகுதியில் ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது இந்த மாவட்டங்களில் ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சியை தவிர்த்து நான்கு மாவட்ட அலுவலர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்பார்கள. இது செங்கல்பட்டு அல்லது சென்னையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நலத்திட்டங்கள்,வளர்ச்சி பணிகள் ஆகியவற்றின் இரண்டு ஆண்டு கால முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிறப்பு திட்டம் செயலாகத் துறை செயலர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.














