பெரம்பலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா திறப்பு

November 29, 2022

தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று சிப்காட் தொழில் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டமாக உள்ள பெரம்பலூரில் இந்த தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதால், தொழில் வளர்ச்சி பெருகும் என்று கூறப்பட்டுள்ளது. பெரம்பலூர் சிப்காட் தொழில் பூங்கா, 243.49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் பூங்கா செயல்பாடுகளுக்காக, பீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் மற்றும் அதை சார்ந்த 10 இணை நிறுவனங்களுடன் மொத்தம் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது. பீனிக்ஸ் […]

தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று சிப்காட் தொழில் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டமாக உள்ள பெரம்பலூரில் இந்த தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதால், தொழில் வளர்ச்சி பெருகும் என்று கூறப்பட்டுள்ளது.

பெரம்பலூர் சிப்காட் தொழில் பூங்கா, 243.49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் பூங்கா செயல்பாடுகளுக்காக, பீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் மற்றும் அதை சார்ந்த 10 இணை நிறுவனங்களுடன் மொத்தம் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது. பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் 2440 கோடி ரூபாயை இங்கு முதலீடு செய்ய உள்ளது. இந்த தொழில் பூங்கா மூலம் 29500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu