தமிழக அமைச்சரவை மாற்றம் - ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை

தமிழகத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகளின் அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதன் காரணமாக, அவர் வகித்து வந்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சார துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். மேலும், தற்போதைய நிலையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கும் […]

தமிழகத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகளின் அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதன் காரணமாக, அவர் வகித்து வந்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சார துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். மேலும், தற்போதைய நிலையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை ஒதுக்க முடிவெடுத்துள்ளார்.

இந்த தகவல்கள் திமுக வட்டாரங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாகவும், இறுதி முடிவு இன்று மாலை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu