முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, சமீபத்தில் நடைபெற்று வரும் அமலாக்க துறையின் நடவடிக்கைக்கு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை, மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்துவது, கவர்னரின் செயல்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.














