உலக முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உலக முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக விரைவில் அமெரிக்க செல்ல உள்ளதாக கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் சிங்கப்பூர், ஜப்பான், மலேசியாவிற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூபாய் 10 ஆயிரத்து 882 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல விரைவில் அமெரிக்கா சென்று பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். முன்னதாக சென்னையில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.