காங்கிரஸ் தலைமையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாம் கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது
கடந்த ஜூன் 23 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில் இரண்டாவது கூட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மு.க ஸ்டாலின் இன்று காலை 11. 20 மணிக்கு விமானம் மூலம் பெங்களூர் செல்கிறார். இன்று நடைபெற உள்ள மாலை விருந்திலும், நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டு நாளை இரவு 9:00 மணிக்கு மு.க ஸ்டாலின் சென்னை வந்தடைகிறார்.
மேலும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.