மறைமலைநகரில் உள்ள மஹிந்திரா சிட்டியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ரூ.210 கோடி முதலீட்டில் மின்கலன் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மறைமலைநகரில் உள்ள மஹிந்திரா சிட்டியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ரூ.210 கோடி முதலீட்டில் மின்கலன் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட்-செய்யாறு தொழில் பூங்காவில் உள்ள எஸ்.u. வி பரிசோதனை தளத்தில் 290 ரூபாய் கோடி முதலீட்டில் மின்வாகன விபத்து பரிசோதனை ஆய்வகத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் விரைவில் 10 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.