மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார்

August 29, 2024

சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். 17 நாட்கள் நீடிக்கும் அரசு முறைப் பயணத்தின் போது, அவர் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களை சந்தித்து, முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளார். துபாய் வழியாக அமெரிக்கா சென்ற ஸ்டாலினுக்கு, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது, சான் பிரான்சிஸ்கோவில் […]

சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். 17 நாட்கள் நீடிக்கும் அரசு முறைப் பயணத்தின் போது, அவர் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களை சந்தித்து, முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளார். துபாய் வழியாக அமெரிக்கா சென்ற ஸ்டாலினுக்கு, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது, சான் பிரான்சிஸ்கோவில் அவர் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றுகிறார். பிறகு, 31ம் தேதி புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து, செப்டம்பர் 2ம் தேதி சிகாகோ செல்லுவார். சிகாகோவில் 10 நாட்கள் முக்கிய நிறுவனங்களுடன் சந்தித்து, முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் 14ம் தேதி, சென்னைக்கு திரும்புவார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu