கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை அடுத்த மாதம் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்- அமைச்சர் சேகர்பாபு

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை அடுத்த மாதம் மு.க.ஸ்டாலின் திறக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், புதிய புறநகர் பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் […]

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை அடுத்த மாதம் மு.க.ஸ்டாலின் திறக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், புதிய புறநகர் பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை- 7 கிலோ மீட்டர் நீளத்திற்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை - 18 கிலோமீட்டர் நீளத்திற்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை - 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu