குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ல் காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட இருக்கிறது.
மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து தொடங்கப்பட உள்ளது. இது ஒரு கோடி மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். இதற்கு ரூபாய் 7 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 21 வயது பூர்த்தி ஆனவராகவும், ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு கீழ் இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். இதற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது. இது வரை 5,00,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருகின்றன. இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட கால அவகாசம் இருப்பதால் இன்னும் பல விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அவர்களின் வங்கி கணக்கிற்கு ரூபாய் 1000 வரவு வைக்கப்பட உள்ளது. இதனை அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி அவரின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.