டிசம்பரில் நிலக்கரி மூலமான மின் உற்பத்தி 15% உயர்வு

January 9, 2023

கடந்த டிசம்பர் மாதத்தில் தேசத்தின் மொத்த நிலக்கரி மூலமான மின் உற்பத்தி 15.03% உயர்ந்து, 98443 மில்லியன் யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. மேலும், இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 76.59% ஆகும். கடந்த 2021 டிசம்பரில், 85579 மில்லியன் யூனிட்டுகள் மின் உற்பத்தி நிலக்கரி மூலம் பதிவானது குறிப்பிடத்தக்கது. அத்துடன், நாட்டின் ஒட்டு மொத்த மின் உற்பத்தி அளவை 2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 13.65% வளர்ச்சி பதிவாகியுள்ளது. இந்த தரவுகளை என்டிபிசி வெளியிட்டுள்ளது. மாதாந்திர அடிப்படையில் […]

கடந்த டிசம்பர் மாதத்தில் தேசத்தின் மொத்த நிலக்கரி மூலமான மின் உற்பத்தி 15.03% உயர்ந்து, 98443 மில்லியன் யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. மேலும், இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 76.59% ஆகும். கடந்த 2021 டிசம்பரில், 85579 மில்லியன் யூனிட்டுகள் மின் உற்பத்தி நிலக்கரி மூலம் பதிவானது குறிப்பிடத்தக்கது. அத்துடன், நாட்டின் ஒட்டு மொத்த மின் உற்பத்தி அளவை 2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 13.65% வளர்ச்சி பதிவாகியுள்ளது. இந்த தரவுகளை என்டிபிசி வெளியிட்டுள்ளது.

மாதாந்திர அடிப்படையில் டிசம்பர் மாத மின் உற்பத்தி 8.9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், நீர் மின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி, வருடாந்திர அடிப்படையில் 5.94% உயர்ந்து, 9132 மில்லியன் யூனிட்டுக்களாக பதிவாகியுள்ளது. அத்துடன், இந்தியாவின் மின் தேவையில் நான்கில் ஒரு பங்கை நிலக்கரி மூலமான மின் உற்பத்தி பூர்த்தி செய்வதாக என்டிபிசி தரவுகள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu