கோல் இந்தியா நிறுவனம் ராஜஸ்தானில் 1190 மெகாவாட் திறனில் சூரிய மின் நிலையம் அமைக்கிறது

October 14, 2022

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம், ராஜஸ்தானில் 1190 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, ராஜஸ்தான் வித்யூத் உத்பதான் நிகாம் லிமிடெட் (RVUNL) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் முன்னிலையில் ஜெய்ப்பூரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. நிகழ்வில் பேசிய அமைச்சர் ஜோஷி, "வரும் 2040 இல், இந்தியாவின் மொத்த மின் தேவை இருமடங்கு உயரும். எனவே, […]

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம், ராஜஸ்தானில் 1190 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, ராஜஸ்தான் வித்யூத் உத்பதான் நிகாம் லிமிடெட் (RVUNL) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் முன்னிலையில் ஜெய்ப்பூரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

நிகழ்வில் பேசிய அமைச்சர் ஜோஷி, "வரும் 2040 இல், இந்தியாவின் மொத்த மின் தேவை இருமடங்கு உயரும். எனவே, மின் தேவையை ஈடுகட்ட புத்தாக்க எரிசக்தி உருவாக்கத்தில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. மாசு இல்லாத முறையில், நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. நாட்டில் நிலக்கரி இருப்பு அபரிமிதமாக உள்ளது. தேவைக்கேற்ப மாநிலங்களுக்கு நிலக்கரி பிரித்து வழங்கப்படும்" என்று கூறினார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், "ராஜஸ்தான் மாநில அரசு புத்தாக்க எரிசக்தி துறையை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் சூரிய மின் நிலையம் அமைக்கப்படுவதால், எளிய மக்களுக்கு சீரான மின் விநியோகம் தடையின்றி வழங்கப்படும். நிலக்கரி இருப்பை பொறுத்தவரை, சட்டீஸ்கர் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் இருந்து போதிய அளவு நிலக்கரி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறித்த நேரத்தில், இந்திய அரசு மற்றும் கோல் இந்தியா நிறுவனத்தின் தலையீட்டால், மாநிலத்தின் நிலக்கரி பற்றாக்குறை தவிர்க்கப்பட்டது. பிற மாநிலங்களுக்கு நிலக்கரியை வழங்க வேண்டிய நிர்பந்தம் களையப்பட்டுள்ளதால், ராஜஸ்தான் மாநிலத்தின் நிதிச் சுமை குறைந்துள்ளது" என்று கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானர் பகுதியில், சுமார் 4846 ஹெக்டேர் நிலம் சூரிய மின் நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சூரிய மின் நிலையத்தின் மொத்த திறன் 2000 மெகா வாட் ஆகும். அதில், இராஜஸ்தானின் RVUNL நிறுவனத்திற்கு 810 மெகாவாட் மின் உற்பத்தியும், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 1190 மெகா வாட் மின் உற்பத்தியும் சொந்தமாகும். இந்த நிலையத்தை RVUNL நிறுவனம் கட்டமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், RVUNL நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஆர் கே ஷர்மா மற்றும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரி வி ரெட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu