கொக்கோகோலா நிறுவனத்தின் இந்திய பிரிவு, அதானி குழுமத்தின் கிளை நிறுவனமான அதானி டிஜிட்டல் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அதிகப்படியான நுகர்வோர்களை, எளிதில் சென்றடைவதற்காக, கொக்கோகோலா நிறுவனம், அதானி குழுமத்துடன் இணைந்துள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கிடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, அதானி குழுமத்தின் நுகர்வோர் தளத்தை பயன்படுத்தி, கொக்கோகோலா தனது தயாரிப்புகளை விற்க உள்ளது. மேலும், அதானி குழுமத்தின் நுகர்வோர் தரவுகளை பயன்படுத்தி, Product Sampling செய்யும் முதல் குளிர்பான நிறுவனமாக கொக்கோகோலா உள்ளது.
இந்தியாவின் முன்னணி விமான நிலையங்களில், கொக்கோகோலா நிறுவனத்தின் குளிர்பானங்கள், அதானி குழுமம் சார்பில், பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக லக்னோ விமான நிலையத்தில் கொக்கோகோலா நிறுவனத்தின் Fanta மற்றும் ThumsUp குளிர்பானங்கள் நுகர்வோர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.