டெக்ஸாஸ் நீதிமன்றத்தில் வர்த்தக ரகசியங்களை திருடியதாக காக்னிசன்ட் இன்போசிஸ் மீது வழக்கு தொடுத்துள்ளது.
ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் மென்பொருள் தொடர்பான வர்த்தக ரகசியங்களை திருடியதாக, டெக்ஸாஸ் பெடரல் நீதிமன்றத்தில் காக்னிசன்ட்டின் துணை நிறுவனம் டிரிசெட்டோ இன்போசிஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. காக்னிசன்ட்டின் மென்பொருள் ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிர்வாக பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை அனுமதியின்றி பயன்படுத்தி மற்றொரு தயாரிப்பை உருவாக்கியது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இன்போசிஸ் குற்றச்சாட்டுகளை மறுத்து, சட்டப்படி எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளது.