காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியாக பணியாற்றி வந்த ரெபேக்கா என்று அழைக்கப்படும் பெக்கி ஷ்மிட், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், மே 5ம் தேதி முதல் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், காக்னிசன்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் வெளியேறி வருவது தொடர்கதையாகி வருகிறது.
பெக்கி ஷ்மிட், கடந்த 2020 பிப்ரவரியில் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது, அவர் வேறு வாய்ப்புகள் தேடி நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, அவர் நிறுவனத்திற்கு ஆற்றிய பணிக்கு, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவிக்குமார் அவருக்கு நன்றிகள் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியேறிய பின்னர், கேத்தி தியாஸ் இடைக்கால தலைமை மக்கள் அதிகாரியாக பணிபுரிவார் என கூறியுள்ளார். மேலும், இந்த பதவிக்கான நிரந்தர அதிகாரியை விரைவில் தேர்ந்தெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.