பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை செலவு குறியீட்டில் சென்னையைப் பின்னுக்குத் தள்ளி கோவை முதலிடம்

October 26, 2023

செர்பியா நாட்டைச் சேர்ந்த நம்பியோ என்ற தனியார் நிறுவனம், இந்திய நகரங்களின் மதிப்பீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு, வாழ்க்கைச் செலவு குறியீடு, சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு ஆய்வு செய்து, இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அளவில் கோவை முதலிடம் பிடித்துள்ளது.நம்பியோ நிறுவனத்தின் பட்டியலில் கோவை முதலிடம் பிடித்த நிலையில், சென்னை 13-ஆம் இடத்தை பிடித்துள்ளது. துறைவாரியாக கணக்கிட்டால், சுகாதார பாதுகாப்பு குறியீட்டில் கோவை முதலிடமும், சென்னை இரண்டாம் இடமும் பிடித்துள்ளன. வாழ்க்கைச் செலவை […]

செர்பியா நாட்டைச் சேர்ந்த நம்பியோ என்ற தனியார் நிறுவனம், இந்திய நகரங்களின் மதிப்பீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு, வாழ்க்கைச் செலவு குறியீடு, சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு ஆய்வு செய்து, இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அளவில் கோவை முதலிடம் பிடித்துள்ளது.நம்பியோ நிறுவனத்தின் பட்டியலில் கோவை முதலிடம் பிடித்த நிலையில், சென்னை 13-ஆம் இடத்தை பிடித்துள்ளது. துறைவாரியாக கணக்கிட்டால், சுகாதார பாதுகாப்பு குறியீட்டில் கோவை முதலிடமும், சென்னை இரண்டாம் இடமும் பிடித்துள்ளன. வாழ்க்கைச் செலவை பொறுத்தவரை, சென்னையை விட கோவையில் வாழ்க்கைச் செலவு குறைவாக உள்ளது. எனவே, இரண்டு துறைகளில் சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆய்வு பட்டியலில், பாதுகாப்பு குறியீட்டில் இந்திய அளவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக சென்னை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu