பாலஸ்தீன பிராந்தியத்துக்கான கொலம்பிய தூதரகத்தை ரமல்லாவில் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோ மேற்கு கரை நகரமான ரமல்லாவில் கொலம்பியாவின் தூதரகத்தை திறக்க உள்ளார் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் லூயிஸ் முறிலோ கூறியுள்ளார். முன்னதாக நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது. இதனை அடுத்து கொலம்பியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசா போரில் இஸ்ரேலின் பங்கை எதிர்த்து வரும் கொலம்பியா சிறிது காலத்திற்கு முன்பு அந்த நாட்டுடன் உறவை முறித்து கொள்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.














