போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 9, 10 தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கடந்த 9,10 தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பொதுமக்கள் நலன் கருதி ஜனவரி 19ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து இன்று நான்காம் கட்ட பேச்சு வார்த்தைக்கு வரும்படி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் இந்த பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளது. இதில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.