இந்திய ரூபாயில் வெளிநாட்டு வர்த்தகம் - மத்திய அரசு அறிவிப்பு

March 31, 2023

இன்று 2023 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வர்த்தக கொள்கை வெளியிடப்பட்ட நிலையில், மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நாணய நெருக்கடி ஏற்பட்டுள்ள நாடுகளுடன், இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள, இந்தியா தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் சுனில் பரத்வால் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக எடுத்துச் செல்வதில் இந்தியா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, சர்வதேச வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், […]

இன்று 2023 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வர்த்தக கொள்கை வெளியிடப்பட்ட நிலையில், மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நாணய நெருக்கடி ஏற்பட்டுள்ள நாடுகளுடன், இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள, இந்தியா தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் சுனில் பரத்வால் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக எடுத்துச் செல்வதில் இந்தியா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, சர்வதேச வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு சரிய வாய்ப்புள்ளது. எனவே, டாலர் பற்றாக்குறை உள்ள நாடுகள், இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்து, தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். - இவ்வாறு வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை வெளியீட்டு நிகழ்வில் பேசப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu