வர்த்தக சிலிண்டர் விலை 84 ரூபாய் குறைப்பு

வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை 84 ரூபாய் குறைந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 1-ம் தேதியான இன்று முதல் சமையல் எரிவாயு உருளை புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை 84 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் 2 ஆயிரத்து 21 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு […]

வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை 84 ரூபாய் குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 1-ம் தேதியான இன்று முதல் சமையல் எரிவாயு உருளை புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை 84 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் 2 ஆயிரத்து 21 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சமையல் எரிவாயு உருளை இன்று முதல் ரூ. 84 குறைக்கப்பட்டு, ஆயிரத்து 937 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu