சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.96 குறைந்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்தது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பலமடங்கு உயர்ந்தது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.96 குறைந்து ரூ.2,045க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 19ஆம் தேதிக்குப் பின்னர் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 5வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.