போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை நடத்த அரசு தரப்பில் 14 பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நீதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர். வருகின்ற 21ஆம் தேதி இக்குழு போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கான கடிதம் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.