வீட்டில் பயன்படுத்தப்படும் பொதுவான ரசாயன பொருட்கள் காரணமாக மூளை வளர்ச்சி பாதிப்படைவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அன்றாடம் நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பற்பசை, கிருமி நாசினி, உடல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள், துணிமணிகள், மர சாமான்கள் போன்றவற்றில் ரசாயன பொருட்கள் கலந்துள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் பல்வேறு நரம்புக் கோளாறுகள் மற்றும் மூளை பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பான விரிவான அறிக்கை நேச்சர் நியூரோ சயின்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. அதில், அதிகமாக ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்துவோருக்கு மூளை பாதிப்பு மற்றவர்களை விட அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.