தமிழக அரசு நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களில் முக்கிய முன்னேற்றம் செய்துள்ளது.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதிச்சடங்கு செலவுக்கான நிதி உதவி ரூ.2,500-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நெருக்கடியான சூழலில் நிதி பாதுகாப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.














