கழிவு நீர் அகற்றும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் 30 லட்சம் நிவாரணம்

October 20, 2023

தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடைகளில் தூய்மை பணியில் ஈடுபடும் பொழுது விஷ வாயு தாக்கி உயிர் இழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது தொழிலாளி உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு ரூபாய் முப்பது லட்சம் நிவாரணம் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் நிரந்தரமாக […]

தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடைகளில் தூய்மை பணியில் ஈடுபடும் பொழுது விஷ வாயு தாக்கி உயிர் இழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது தொழிலாளி உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு ரூபாய் முப்பது லட்சம் நிவாரணம் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் நிரந்தரமாக உடல் பாதிப்பு ஏற்பட்டால் குறைந்த பட்ச இழப்பீடு ரூபாய் 20 லட்சம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு மற்ற குறைபாடுகள் ஏற்பட்டால் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பித்த தரவுகளில் ஐந்து ஆண்டுகளில் 347 பேர் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்பொழுது இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu