காவல் மரணங்கள், துப்பாக்கிச்சூட்டில் பலியானால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.7.50 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலைய மரணங்களில் உயிரிழப்போர் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கான தொகையும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கான தொகையும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களால் நிரந்தர உடல் முடக்கம் ஏற்படுபவர்களுக்கான தொகையும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களால் உடல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டால் அதற்கான இழப்பீட்டுத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.














