தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீடு தேர்வுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவர்கள் தன் திறன் பற்றி அறிந்து கொள்ளவும், அதனை மேம்படுத்தவும், தங்கள் கற்றல் திறனை அதிகரிக்கவும் திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த தேர்வுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளும் தேர்விற்கான முதல் நாள் தேர்வுக்கான வினாத்தாள்களை https://exam.tnschools.gov
in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்என கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.