கிளர்ச்சியாளர்கள் வசம் வீழ்ந்தது காங்கோவின் புகாவு நகரம்

February 18, 2025

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், முக்கிய நகரமான புகாவு ருவாண்டா ஆதரவு பெற்ற எம் 23 கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. தெற்கு கீவு மாகாணத்திலுள்ள கோமா நகரை கடந்த மாதம் கைப்பற்றிய அந்தக் குழு, பின்னர் கவுமு நகரின் விமான நிலையத்தையும் கைப்பற்றியது. தற்போது, தொடர்ச்சியான முன்னேற்றத்தின் மூலம் புகாவு நகரிலும் கட்டுப்பாட்டை பெற்றதாக எம்23 குழு அறிவித்துள்ளது. அவர்களின் நகர் புகுதலுக்கு முன்னதாக அங்கிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், முக்கிய நகரமான புகாவு ருவாண்டா ஆதரவு பெற்ற எம் 23 கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. தெற்கு கீவு மாகாணத்திலுள்ள கோமா நகரை கடந்த மாதம் கைப்பற்றிய அந்தக் குழு, பின்னர் கவுமு நகரின் விமான நிலையத்தையும் கைப்பற்றியது. தற்போது, தொடர்ச்சியான முன்னேற்றத்தின் மூலம் புகாவு நகரிலும் கட்டுப்பாட்டை பெற்றதாக எம்23 குழு அறிவித்துள்ளது. அவர்களின் நகர் புகுதலுக்கு முன்னதாக அங்கிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கோவில் தாது வளமுள்ள பகுதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டில் 120-க்கும் மேற்பட்ட கிளர்ச்சி அமைப்புகள் இயங்குவதாகக் கூறப்படுகின்றன. அவற்றில் எம் 23 குழுவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ருவாண்டாவின் ஆதரவைப் பெறும் இந்த குழு, தங்கள் சமுதாயத்தினரை பாதுகாப்பது என்ற காரணத்துக்காகவும், காங்கோ அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பாகவும் போராடுவதாக தெரிவிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu