காங்கோவில் இஸ்லாமிய தேச அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் பொதுமக்கள் 41 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காங்கோவின் வடக்கு பகுதி மாகாணமான கிவுவின் மாசலா, கேமே, மகிகி ஆகிய கிராமங்களுக்கு வந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பொது மக்களை படுகொலை செய்தனர். அங்கு பாதுகாப்பு படையினர் இல்லாததால் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றி திறிகின்றனர் என்று உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பல ஆண்டுகளாக 120க்கும் மேற்பட்ட ஆயுத குழுக்கள் ஆதிக்க போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.














