ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு வருகிற 13 மற்றும் 14ஆம் தேதிகளில் டெல்லியில் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிசோரம்,சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த ஐந்து மாநிலங்களுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துவிட்டது. ராஜஸ்தான் தவிர மற்ற மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை விரைவில் காங்கிரஸ் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7ஆம் தேதியும்,சட்டீஸ்கர் மாநிலத்திற்கு 7 மற்றும் 17ஆம் தேதியும், மத்திய பிரதேசத்தில் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு வருகிற 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் டெல்லியில் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது.