மகாராஷ்டிராவில் காங்கிரஸ் 18 இடங்களில் போட்டி

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் 18 இடங்களில் போட்டியிடுவதாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து சந்திக்க உள்ளன. இம்மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளன. இதில் ஒவ்வொரு கட்சிகளும் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் […]

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் 18 இடங்களில் போட்டியிடுவதாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து சந்திக்க உள்ளன. இம்மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளன. இதில் ஒவ்வொரு கட்சிகளும் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி உத்தவ் தாக்கரே- இன் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மேலும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu