மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மகாராஷ்டிராவில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக், மர்ம நபர்களால் சுடப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போதே அவர் உயிரிழந்தார். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருந்தவர் ஆவார். மேலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். அவரது கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.