கர்நாடகா - சட்டப்பேரவைத் தலைவராக யு டி காதர் தேர்வு

கர்நாடக மாநிலத்தில், அண்மையில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், சட்டப்பேரவை தலைவராக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவும் ஆன யு டி காதர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில், இஸ்லாமியர் ஒருவர் சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக அவைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஆர் வி தேஷ்பாண்டே பதவி […]

கர்நாடக மாநிலத்தில், அண்மையில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், சட்டப்பேரவை தலைவராக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவும் ஆன யு டி காதர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில், இஸ்லாமியர் ஒருவர் சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக அவைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஆர் வி தேஷ்பாண்டே பதவி வகித்து வந்தார். இந்நிலையில், நிரந்தர அவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் காதரை தவிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, அவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu