இமாச்சலப் பிரதே முதலமைச்சரை தேர்தெடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

December 9, 2022

புதிய முதலமைச்சரை தேர்தெடுக்க இமாச்சலப் பிரதேசத்தில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கியது. இதில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இமாச்சல் மாநில பொறுப்பாளர்களான […]

புதிய முதலமைச்சரை தேர்தெடுக்க இமாச்சலப் பிரதேசத்தில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கியது. இதில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இமாச்சல் மாநில பொறுப்பாளர்களான சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பரகேல், பூபிந்தர் ஹீடா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu