பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கட்சியின் தலைமைக் கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி இதனை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதனை வெளியிட்டனர். இதில் எஸ் சி, எஸ் டி, ஓ பி சி பிரிவினருக்கு 50 % இட ஒதுக்கீடு, மத்திய அரசில் காலிபணியிடங்கள் 30 லட்சம் நிரப்பப்படும். அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும் போன்ற முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.














