சென்னையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: தமிழக அளவில் 659 வாக்குகள் பதிவு

October 18, 2022

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தமிழக அளவில் சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 659 வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்களான கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, கேரளாவை சேர்ந்த சசிதரூர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் மொத்தம் 711 பேர் உள்ளனர். இவர்களுக்கு கியூஆர் கோடு உடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. வாக்குப்பதிவுக்காக டெல்லியில் […]

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தமிழக அளவில் சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 659 வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்களான கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, கேரளாவை சேர்ந்த சசிதரூர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் மொத்தம் 711 பேர் உள்ளனர். இவர்களுக்கு கியூஆர் கோடு உடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

வாக்குப்பதிவுக்காக டெல்லியில் இருந்து 4 பிரத்யேக வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், வாக்காளர் பட்டியல்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் ஆகியவை வாக்குப்பதிவு நடைபெறும் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டன. தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

இதில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பொருளாளர் ரூபி மனோகர், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் வாக்களித்தனர். சென்னையில் மொத்தம் 659 வாக்குகள் பதிவாகின. புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஹிபி ஈடன் எம்.பி. முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது. 29 பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu